தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-02-15 13:03 GMT

பெரம்பலூர்-ரோவர் பள்ளி சாலையில் இருந்து மதனகோபாலபுரம், கம்பன் நகர் செல்லும் சாலையில் முதல் தெரு மண்சாலையாக உள்ளது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் மழைக்காலத்தில் அந்த தெருவில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பெரம்பலூர் நகரப்பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் கம்பன் நகர் முதல் தெருவில் மட்டும் இன்னும் தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட் நகராட்சி நிர்வாகத்தினர் கம்பன் நகர் முதல் தெருவில் தார்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்