பந்தலூரில் இருந்து மேங்கோரேஞ்சு வழியாக ஏலமன்னா செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலையை தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சாலை ஆங்காங்கே பழுதடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் குழிகள் ஏற்பட்டு உள்ளது. அந்த குழிகளில் வாகனங்கள் ஏறி இறங்கினால் பழுதாகி விடுகின்றன. மேலும் மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கியும் வருகின்றன. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.