புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் பொதுமக்களின் வசதிக்காக பஸ் நிறுத்தம் செல்லும் பகுதியில் புதிய தார்சாலை போடப்பட்டது. மேலும் சில தெருக்களிலும் புதிதாக தார்சாலை போடப்பட்டு ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடைகள் மீது வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன், இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை மீது வெள்ளை வர்ண கோடுகள் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.