திருச்சி மாவட்டம் லால்குடி கல்லக்குடி பகுதியில் உள்ள சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் முற்றிலும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இந்த சாலையில் செல்ல கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.