குண்டும், குழியுமான சாலை

Update: 2025-10-19 10:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பாலக்காட்டில் இருந்து நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லக்கூடிய தார்சாலை சேதமடைந்த நிலையில் பெரிய பள்ளங்கள் உருவாகி குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விளைபொருட்களை கொண்டுசெல்லும் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்