சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2025-10-19 09:51 GMT

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பஸ் நிறுத்தம் முன்பு சாலை உள்ளது. இந்த சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. மேலும், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி