கும்பகோணம் அரியதிடல் கிராமத்தில் சில்வர் நகர், கோல்டன் நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து கொற்கை மெயின் சாலைக்கு செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும்,குழியுமாக இருக்கிறது.இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்கவும், முறையான சாலை வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.