திண்டுக்கல்லை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் அரவிந்தநகர், சாஸ்தா நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக இங்கு சாலை வசதி செய்யப்படவில்லை. மண் பாதையாகவே இருக்கிறது. மழைக்காலங்களில் இங்குள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் பலனில்லை. இதனால் தங்களுக்கு சாலை வசதி கிடைப்பது எப்போது? என்ற ஏக்கத்தில் உள்ளனர்.