பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு செல்லும் இடைப்பட்ட பகுதியில் சங்குப்பேட்டை என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து ஆத்தூர், துறையூர் செல்வதற்கான பிரிவு சாலைகள் செல்வதால் இப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.