பெரம்பலூர் கடைவீதியில் ஒருவழி சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்போது பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த சாலையை இருவழி சாலையாக பயன்படுத்துவதனால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை ஒருவழி சாலையாக பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.