பெரம்பலூர் மாவட்டம் கம்பன் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள தெருக்களில் ஒரு தெருவில் மட்டும் தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் மழை பெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள முதியவர்கள், பெண்கள் இந்த சாலையில் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.