வெண்ணந்தூரிலிருந்து மல்லூர் செல்லும் சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகே சாலை அபாயகரமான வளைவு பகுதியாக உள்ளது. இதன்காரணமாக எதிரே வரும் வாகனம் தெரியாமல் பலர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
-ராஜமாணிக்கம், அனந்தகவுண்டம்பாளையம்.