அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் உள்பட நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.