வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-10-12 11:32 GMT

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அம்மா பேட்டை ஊராட்சி பூலாங்குளத்துபட்டியில் இருந்து வடக்கு அம்மா பேட்டை செல்லும் தார்சாலையின் இருபுறமும் முட்செடி உள்ளிட்ட செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்