கும்பகோணம் அருகே உள்ளூர் பகுதியில் வார்டு எண்-2 அன்னை அஞ்சுகம் நகர், ராதாகிருஷ்ணன் நகர் உள்ளது. இங்குள்ள சாலை பெயர்ந்து சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் குளம் போல தேங்குகிறது. சாலை சேறும்,சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. இதன்காரணமாக அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.