தோட்டியோடு முதல் புதுக்கடை வரை உள்ள நெடுஞ்சாலையில் தோட்டியோடு முதல் திங்கள்சந்தை வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் தான் ஆகிறது. புதிய தார் சாலையின் இருபுறமும் ஓரத்தில் நிலப்பகுதி பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருவோர் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க சாலையின் இரு ஓரங்களிலும் மண் நிரப்பிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.