பண்ருட்டி- வடலூர் வரையிலான சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி பல வருடங்கள் ஆகியும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.