காடாம்புலியூர் அடுத்த காளிகுப்பம் கிராமத்தில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி புதிதாக தார் சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.