திண்டுக்கல் பாரதிபுரம் மெயின் ரோட்டில் அரசு முதியோர் இல்லம் அருகே சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் இருக்கிறது. சாலையோரத்தில் தடுப்புச்சுவரோ அல்லது சாக்கடை கால்வாய்க்கு மூடியே அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாக்கடை கால்வாய்க்கு மூடி அல்லது சாலையோர தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.