‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-10-05 13:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் பஸ் நிறுத்தம் எதிர்புறம் உள்ள பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் பாலத்தில் ஓட்டை விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்ல முடியாமல் மாற்றுப்பாதையில் சுற்றி செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு நேர விரையம் ஏற்படுவதால் கடும் அவதியடைந்து வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் பாலத்தில் ஏற்பட்ட ஓட்டையை அடைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்