கவுண்டம்பாளையம் அருகே ராமகிருஷ்ணா நகர் பால விநாயகர் கோவில் வீதியில் சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. ஆனால் ஜல்லிக்கற்கள் மட்டும் போடப்பட்ட நிலையில் தார் ஊற்றாமல் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே தார் ஊற்றி சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.