சீரமைக்க வேண்டும்

Update: 2025-10-05 10:16 GMT

நாகர்கோவில் கோட்டாரில் இருந்து பீச்ரோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் எப்போது அதிகளவில் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அருகில் ஜல்லிகள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்