பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குழிக்கடவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தார்சாலை உள்ளது. ஆனால் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மழை பெய்தால் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.