சாலையில் பள்ளங்கள்

Update: 2025-10-05 10:04 GMT

கோவை மாநகராட்சி 63-வது வார்டுக்கு உட்பட்ட ராமநாதபுரம் 80 அடி ரோடு அங்கண்ணன் 6-வது வீதி பகுதியில் பாதாள சாக்கடையை சீரமைக்க சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஆனால் சீரமைப்பு பணி முடிந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் சாலையை புதுப்பிக்கவில்லை. இதனால் அங்குள்ள சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. அத்துடன் மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். நடந்து செல்லும்போது கால் தவறி மற்றும் வலுக்கி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்