ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-ம் வார்டு பகுதியில் தொழிக்கடையில் இருந்து பத்தறை காலனிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டு் குழியுமாக காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, பத்தறை காலனி.