புதுக்கோட்டை நகரெங்கும் குறிப்பாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வந்து தங்கிச் செல்லும் ரோசா இல்லம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்திருக்கும் புதுக்கோட்டை -மதுரை நெடுஞ்சாலையில் மாடுகள் கட்டுப்பாடின்றி சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த சாலை வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் எங்கு தங்களை மாடுகள் முட்டிவிடுமோ என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மாடுகள் சாலையில் படுத்துக் கொள்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.