ஈரோடு பிரப் ரோட்டில் இருந்து இருந்து வாசுகி வீதி செல்லும் வழியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?