வர்ணம் பூசப்படாத வேகத்தடை

Update: 2025-10-05 09:42 GMT

 பெரம்பலூர் மாவட்டம், காரை கிராமத்தில் இருந்து புது குறிச்சி செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள காலனி தெருவில் வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடை இருப்பதற்கான எவ்வித எச்சரிப்புகளும் அந்த இடத்தில் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டு இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடையின் மீது வெள்ளை வர்ண கோடுகள் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்