சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 10-வது தெருவில் ஏராளமான குடும்பங்கள் உள்ளது. இந்த தெருவில் மழைநீர் வடிகால் பணிக்காக சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு இன்னும் சரிசெய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியும் ஆவதோடு, விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.