சாலை கழிவுகளால் பொதுமக்கள் அவதி

Update: 2025-10-05 06:36 GMT

சென்னை மாநகராட்சி 8-வது மண்டலம், 101-வது வார்டில் உள்ள கதிரவன் காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு புதியதாக சாலை அமைப்பதற்காக 2 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு, பழைய சாலைகளும் சுக்குநூறாக உடைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய சாலை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலை நீடிப்பதால் வாகனங்களை குடியிருப்பை விட்டு எடுக்கவும், சாலையில் வயது முதிர்ந்தவர்களும் நடக்கவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குவித்து வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலை கழிவுகளை உடனடியாக அகற்றி புதிய சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்