சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-02-22 12:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பெரம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரியப்பட்டி கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அண்டக்குளத்தில் இருந்து பெரியதம்பிஉடையான்பட்டி செல்லும் சாலையில் கரியப்பட்டி பிரிவு சாலை உள்ளது. சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை கற்பிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவசர நேரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்