ஈரோடு அருகே உள்ள பெரியசடையம்பாளையத்தில் இருந்து ரிங் ரோடு செல்லும் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மற்றும் எல்லம்மாதேவி கோவிலுக்கு இடையில் தார் சாலையையொட்டி மண் அரிப்பால் ஒரு பெரிய குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.