குண்டும் குழியுமான சாலையால் விபத்து

Update: 2025-09-28 17:39 GMT

 திருப்பூர்  வடக்கு தாலுகா 31-வது வார்டு சூர்யா நகர் 2-வது வீதி செல்லும் சாலை பல மாதங்களாக பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வானங்களில் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால் படுகாயம் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்