செம்பட்டி பஸ் நிலையம் அருகே செம்பட்டி-மதுரை சாலை, செம்பட்டி-திண்டுக்கல் சாலை உள்ளது. இந்த சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே செம்பட்டி பஸ் நிலையம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.