புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம், துவார் கிராமம் கருப்பட்டிப்பட்டி செல்லும் சாலையில் இருந்து அக்னி ஆற்றுப்பாலம் வரை சுமார் 2 கிலோமீட்டர் நீளம் உள்ள தார்சாலை, அமைக்கப்பட்டு சில ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக கறம்பக்குடி, மழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.