விபத்து அபாயம்

Update: 2025-09-28 12:07 GMT

கோவை பாலசுந்தரம் சாலை செங்காடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய குழி தோண்டப்பட்டது. அங்கு குழாய் சீரமைப்பு பணி முடிந்த பிறகு குழியை முறையாக மூடவில்லை. குழியில் இருந்து தோண்டிய மண்ணை அங்கேயே போட்டு வைத்து உள்ளனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த குழியை முறையாக மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்