திருச்சி பட்டர் வொர்த் ரோடு, காளியம்மன் கோவில் பகுதி, ஐஜி கல்லூரி உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையின் குறுக்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வேகத்தடைகளில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால், இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி செல்கின்றனர். இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த வேகத்தடைகளில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாத வேகத்தடைகள் மீது வெள்ளை வர்ண கோடுகள் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.