பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அத்தியூர் கிராமத்தில் இருந்து வேப்பூர் செல்லும் வழியில் உள்ள தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் அவர்கள் நிலத்திற்கும், பொதுமக்கள் வேப்பூர், கீழமாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கும் செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.