எப்போது பதிக்கப்படும்?

Update: 2025-09-28 10:02 GMT

செங்கல்பட்டு மாவட்டம் குளத்துமாநகர் பகுதியில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் 4-வதுதெருவில் பாதாள சாக்கடைக்கான பணிகள் நடைபெறுகிறது. 2 மாதங்களுக்கு முன்பே பாதாள சாக்கடை பணிக்காக கொண்டுவரப்பட்ட வளையங்கள் இன்றளவும் பதிக்கப்படாமல் சாலையின் நடுவே போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போகுவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அவ்வபோது நடக்கிறது. எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை பணிகளை முடிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்