செங்கல்பட்டு மாவட்டம், கன்னிவாக்கம் குந்தன் நகர் பகுதியின் பிரதான சாலையை பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் இந்த பகுதியின் சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை அடைகிறார்கள். மேலும் மழைநேரங்களில் சாலையின் நிலை தெப்பக்குளம் போல காட்சி அளிக்கிறது. பொதுமக்களின் சிரமத்தை போக்கும்வண்ணம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.