சேதமடைந்த சாலை

Update: 2025-09-28 07:36 GMT

கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பொத்தையடி சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கும், நான்கு வழிச்சாலைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள தார் சாலை ஜல்லிகள் பெயர்ந்து சிதறி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொத்தையடி சந்திப்பு பகுதியில்  சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்