குறிஞ்சிப்பாடி அண்ணா நகரில் குறிஞ்சிப்பாடி- வடலூர் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்று கட்டப்பட்டது. தற்போது அதன் மையப்பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அந்த திடீர் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் அந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.