மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இணைப்பு பாலத்தில் ஆங்காங்கே சாலை சேதமடைந்து பள்ளங்களாக உள்ளது. இந்த பாலத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பாலத்தில் உள்ள பள்ளங்களை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.