மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பெரிய ஆலங்குளம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் பாதை தார்ச்சாலை இன்றி குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சிதறி கிடக்கும் கற்களால் அவ்வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இப்பாதையின் இருபுறங்களிலும் வளர்ந்து கிடக்கும் முட்செடிகளும் இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி மேற்கண்ட வழிதடத்தில் புதிய தார்ச்சாலை அமைத்து தரவும், முட்செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.