பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு இருந்து எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் அந்த சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.