வடகரை கீழ்பிடாகை பசும்பொன்நகரில் இருந்து வடகரை மெயின் ரோடு வரையிலும் 2 கி.மீ. தூரத்துக்கு சாலை குறுகியதாக உள்ளது. இந்த வழியாகத்தான் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானவர்கள் செல்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.