சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-09-21 11:58 GMT

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் சிரமமின்றி பயணம் செய்ய முடியவில்லை. குறிப்பாக நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆம்புலன்சில் வேகமாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்