விபத்தில் சிக்கும் அபாயம்

Update: 2025-09-21 11:34 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அளவுக்கு அதிகமான அளவில் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலமாக தேங்காய் உரி மட்டைகள் ஏற்றி செல்லப்படுகிறது. இவ்வாறு அளவுக்கு அதிகமாக எந்த ஒரு பாதுகாப்பு வலையும் இன்றி கொண்டு செல்லப்படுவதால். லாரிகளில் இருந்து சாலையில் தேங்காய் மட்டைகள் ஆங்காங்கே சிதறி விழுந்த வண்ணமாக செல்கிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்