திருச்சி - கரூர் சாலையில் பெருகமணி அருகே சாலை தடுப்பு அமைந்துள்ள பகுதியில் சாலை ஓரத்தில் சுமார் ஒரு அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முந்தி செல்ல முயலும்போது சாலையோர பள்ளத்தில் வாகனத்தை விட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எந்தவித அசம்பாவிதமும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் ஓரங்களில் மண் அணைத்து பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்க்றோம்.