ரெயில்வே சுரங்கப்பாதை சீரமைக்கப்படுமா?

Update: 2025-09-21 11:26 GMT

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெட்டவாய்த்தலை காந்திபுரம் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் நீர் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழை பெய்யும் போது இந்த சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி காணப்படுவதால், இந்த சுரங்கப்பாதையை இப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த சுரங்கப்பாதையில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இந்த சுரங்கப்பாதையை பெண்கள், முதியவர்கள் கடக்க பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சுரங்கப்பாதையை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்